BREAKING NEWS
Search

அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் அமைப்பினர் போராட்டம்!

கொழும்பு சினிமா விழாவை புறக்கணியுங்கள்: அமிதாப்பை நேரில் சந்தித்து நாம் தமிழர் இயக்கத்தினர் கோரிக்கை!

மும்பை: கொழும்பில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவை அமிதாப்பச்சன் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் மும்பையில் அவரது வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜுன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார். இவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸே்வர்யா ராய் ஆகியோரும் இந்த அமைப்பில் உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் கலைஞர்களுக்கு அழைப்பிதழ் வைத்தது இலங்கை தூதரகம். ஆனால் அனைத்துக் கலைஞர்களும் ஒரு மனதாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்களும் இந்த விழாவில் இந்திய கலைஞர்கள் பங்கேற்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்சே அரசாங்கம் தலைநகர் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளை கைவிட்டு, சக இந்தியரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மும்பை ஜுஹூவில் உள்ள நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது, அந்த நிகழ்ச்சிக்கான விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அமிதாப்பைச் சந்தித்து கோரிக்கை

போராட்டத்தின் போது அமிதாப்பச்சன் வீட்டில் இருந்தார். போராட்டம் நடந்து முடிந்த பிறகு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் அமிதாப்பச்சனை சந்தித்து தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை கேட்டுக் கொண்ட அமிதாப், இது பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்.

நாம் தமிழர் அமைப்பின் போராட்டம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
19 thoughts on “அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் அமைப்பினர் போராட்டம்!

 1. mani

  சீமான் அவர்களே வாழ்த்துக்கள் ,,, உங்களால் தமிழகத்தில் மாற்றம் நிகழ போகிறது,,காத்திருக்கிறோம் அதை காண

 2. how is it possible?

  கண்டிப்பா அமிதாப் கேட்டிடுவாறு !!! போயி புள்ள குடிங்கள படிக்கவையுங்க

 3. possible

  அவர் கேக்குரரோ இலையோ ,எதிர் கிறார்கள் என்ற பயம் மற்ற வர்களுக்கு வர தொடங்கிருகும் எந்த சின்ன போராட்டமும் வீணாக போவதில்லை ,, உன்னை போல புள்ள குட்டிய மட்டுமே பார்க்குற பி தின்றும் பன்றிகளுக்கு இது என்றும் புரிய போவதில்லை ,, மிஸ்டர் how is it possible?

 4. palPalani

  சிறு துரும்பும் பல் குத்த உதவும்…

  சிறு துளி பேரு வெள்ளம்..

  இது போன்ற எதிர்ப்புகள்தான் பின்னாளில் பெரு மாற்றங்களுக்கு அடித்தளம்.

  நாம் தமிழர் அமைப்பினற்கு நன்றி!!!

 5. damildumil

  //நாம் தமிழர் அமைப்பின் போராட்டம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.//

  ஹைய்யோ….ஹைய்யோ…. இங்க தமிழ் நாட்டுலேயே இவங்க வந்தா ஒரு ஆட்டோகாரன் கூட வழி விட மாட்டான். இவங்க போராட்டம் நடத்துனதுல மும்பையே பரபரப்பாயிடுச்சாமா?

 6. ayan

  ஏன்*damildumil ***********88 ,, இவங்க ஆறு மாசத்துல ஒரு அமைப்பு தொடங்கி , அத அரசியல க்கி எந்த பிரதி பலனும் இல்லாமல் இனத்துக்கு போராடுறாங்க அவங்கள கிண்டல் பண்ற ,,, நீஎல்லாம் சீ,,,,,து தூ ,,,,,,,,*********

 7. Guevara

  தன்னம்பிக்கை மிக்க சீமானால் தமிழ்நாட்டில் ஓர் எழிச்சிமிக்க தமிழின மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று ஆணித்தரமாக நம்பலாம். நம்புவோம் !!!

  வாழ்க நாம் தமிழர்

 8. Appavi

  damildumil கமெண்ட் சூப்பர். அது தான் உண்மையும் கூட .

 9. r.v.saravanan

  கோரிக்கையை கேட்டுக் கொண்ட அமிதாப், இது பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்

  தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும்

 10. David

  சீமான் அவர்களே வாழ்த்துக்கள் ,,, உங்களால் தமிழகத்தில் மாற்றம் நிகழ போகிறது,,காத்திருக்கிறோம் அதை காண

 11. vasanth

  சீமானுக்கு தன்னை பிரபலபடுத்த, தயாபு செய்து தமிழை விட்டுவிடுங்கள், மக்களுக்காக செய்ய வேண்டியது எவ்வளபு உள்ளது ,பிரவிய்லே வந்த மதத்தை விட்டு மறியவரதனே நீங்கள் .மதம் ,mozhli ,எல்லாம் மனிதன் வளமுடன் வாழ பிறந்தவையே ,சண்டை பிடிப்பதற்கு இல்லை .

 12. Sean

  சிறு துரும்பும் பல் குத்த உதவும்…

  சிறு துளி பேரு வெள்ளம்..

  இது போன்ற எதிர்ப்புகள்தான் பின்னாளில் பெரு மாற்றங்களுக்கு அடித்தளம்.

  நாம் தமிழர் அமைப்பினற்கு நன்றி!!!

 13. குமரன்

  கூட்டம் கம்மியோ ஜாஸ்தியோ

  அமிதாப் தன் திட்டத்தை மறுபரிசீலனை செய்கிறேன்னு சொன்னது வெற்றிதானே?

 14. mani

  மானமுள்ள தமிழர்களே !!
  உங்களுக்கு எதிராக தமிழின துரோகிகள் , இனத்தின் இறப்புகளை மறந்த பைத்தியகாரர்கள் ,டமில்டுமில்,அப்பாவி போன்ற உணர்வு இல்லாத ***** என்ன கமென்ட் சொன்னாலும் கண்டு கொள்ளாதிர்கள் ,,நீங்கள் போராடுங்கள் இனி சின்ன விசயம்னாலும் விட்டு கொடுகாதிர்கள் ,,, உங்களுக்கு இந்த தமிழனின் வாழ்த்துகள் ,,,,,,,

 15. Joseph

  மானமுள்ள தமிழர்களே !!
  உங்களுக்கு எதிராக தமிழின துரோகிகள் , இனத்தின் இறப்புகளை மறந்த பைத்தியகாரர்கள் ,டமில்டுமில்,அப்பாவி போன்ற உணர்வு இல்லாத ***** என்ன கமென்ட் சொன்னாலும் கண்டு கொள்ளாதிர்கள் ,,நீங்கள் போராடுங்கள் இனி சின்ன விசயம்னாலும் விட்டு கொடுகாதிர்கள் ,,, உங்களுக்கு இந்த தமிழனின் வாழ்த்துகள் ,,,,,,,

 16. Rob

  கூட்டம் கம்மியோ ஜாஸ்தியோ

  அமிதாப் தன் திட்டத்தை மறுபரிசீலனை செய்கிறேன்னு சொன்னது வெற்றிதானே?

 17. Simon

  மானமுள்ள தமிழர்களே !!
  உங்களுக்கு எதிராக தமிழின துரோகிகள் , இனத்தின் இறப்புகளை மறந்த பைத்தியகாரர்கள் ,டமில்டுமில்,அப்பாவி போன்ற உணர்வு இல்லாத ***** என்ன கமென்ட் சொன்னாலும் கண்டு கொள்ளாதிர்கள் ,,நீங்கள் போராடுங்கள் இனி சின்ன விசயம்னாலும் விட்டு கொடுகாதிர்கள் ,,, உங்களுக்கு இந்த தமிழனின் வாழ்த்துகள் ,,,,,,,

 18. damildumil

  //அமிதாப் தன் திட்டத்தை மறுபரிசீலனை செய்கிறேன்னு சொன்னது வெற்றிதானே//

  அப்படின்னு அமிதாப் சொல்லலை, அமிதாப் சொன்னாருன்னு இவங்க சொல்றாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *