BREAKING NEWS
Search

அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் அமைப்பினர் சாகும்வரை உண்ணாவிரதம்!

அமிதாப் வீட்டு முன் சாகும்வரை உண்ணாவிரதம்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பாக நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பல நூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் நாளை காலை 10 மணி முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஐஃபா (IIFA) விருது வழங்கும் விழா வரும் ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு சிறப்புத் தூதுவர் பொறுப்பை ஏற்றிருப்பவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

தனது போர் குற்றங்களை சர்வதேச பார்வையிலிருந்து மறைக்க இலங்கை செய்யும் முயற்சி இது என்றும், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுறும் தருணத்தில் தமிழரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இலங்கையின் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு இந்திய கலைஞர்கள் துணை போகக் கூடாது என்றும் தமிழ் அமைப்புகள் கூறி வருகின்றன.

ஏற்கனவே நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அமிதாப் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு அமிதாப் செல்லமாட்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ‘இந்த விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐஃபா விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்த மாட்டோம் என அறிவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

பல நூறு குடும்பங்கள் அமிதாப் வீட்டு முன் நாளை காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள் என்றும், மும்பை தமிழர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி, இயக்கங்களை மறந்து தமிழராய் ஒன்றுகூடி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், நாம் தமிழர் அமைப்பின் மும்பை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், அர்ஜுன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.




2 thoughts on “அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் அமைப்பினர் சாகும்வரை உண்ணாவிரதம்!

  1. sakthivel

    இலங்கை விழாவுக்கு செல்லும் அனைத்து நடிகர்களின் படத்தையும், ஈழத்தை நேசிக்கும் உறவுகள் புறக்கணித்தே ஆக வேண்டும்…. இது நாம் ஈழத்தில் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு செய்யும் மரியாதை.

  2. Manoharan

    நம்மிடையே உள்ள சிலருக்கே தமிழ் மக்கள் மீதும்,ஈழச் சாவுகள் மீதும் அக்கறை இல்லாதபோது, அதை வேற்று மொழிக்காரனிடம் எதிர்பார்த்து என்ன பயன்? என்றைக்கோ மனதளவில் நிறைய தமிழர்கள், இந்தியர்கள் வேறு தமிழர்கள் வேறு என்று பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *