BREAKING NEWS
Search

அமிதாப் என் குரு… ரோல் மாடல்! – ரஜினி

அமிதாப் என் குரு… ரோல் மாடல்! – ரஜினி

மிதாப் பச்சன்தான் திரையுலகில் எனக்கு தூண்டுதல், ரோல்மாடல், குரு…, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:

இப்படி ஒரு வாய்ப்பைத் தந்ததற்காக இங்குள்ளவர்களுக்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் மிகையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பக்கத்தில் ஒரு ராஜஸ்தானி, தெரிந்தவர், பெயர் நந்துலால். 60 வயசுக்கு மேலிருக்கும்.

என்னைப் பார்த்ததும், ‘என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிடுச்சே’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘ஆமாங்க வயசாகுதில்ல’ என்று சமாளித்தேன். ‘அப்படீன்னா ரிட்டயர் ஆகிட்டீங்களா…’ என்றார். ‘இல்லை, ரோபோன்னு ஒரு படம் நடிக்கிறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க’ என்றும் கூறினேன். உடனே அவர், ‘ஓ, ஐஸ்வர்யா ராயா… குட். சரி, ஹீரோ யாரு?’ என்றார்.

‘நான்தான் ஹீரோ’ என்றேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பை சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அந்தப் பக்கம் போனதும், ‘அட, இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. இவருக்கு ஜோடியா நடிக்கிறாராமே… அபிஷேக் எப்படி ஒத்துக்கிட்டார்… அட, இந்த அமிதாப்பச்சனுக்குதான் என்னாச்சு’ என்று கூறியது என் காதில் விழுந்தது. எனவே ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)

நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களி இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என்மீது அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.

முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம்.

ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.

இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ந நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளிந் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.

இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.

35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.

அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது”, என்றார் ரஜினி.

ரஜினி பேச்சு- வீடியோ:

-என்வழி
6 thoughts on “அமிதாப் என் குரு… ரோல் மாடல்! – ரஜினி

 1. R O S H A N

  தலைவா Hats off to your humble nature….இப்பிடி ஒரு மனிதரை இந்த நூற்றாண்டு பார்த்ததில்லை….தலைவா we are very fortunate to live in your generation to boast about you….thanks to god for giving me this opportunity…..

 2. khalifa

  இது உயர்ந்த மனிதர்களுக்கு மட்டுமே உள்ள பக்குவம்.
  புதிய மனித பூமிக்குவா. தவம் இருந்து கிடக்கிரோம் தலைவா

 3. endhiraa

  (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)

  சத்தியம் ! சத்தியம் !! சும்மா பின்னுறீங்க விநோஜி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *