BREAKING NEWS
Search

பார்வதி அம்மையாரை வைத்து யாரும் அரசியல் நடத்த இடம்தர முடியாது! – கருணாநிதி

அப்படியொன்றும் கடுமையான நிபந்தனைகள் அல்ல! – கருணாநிதி

சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு அப்படியொன்றும் கடுமையான நிபந்தனைகளை மத்திய அரசு விதிக்கவில்லை. அதே போல தமிழகத்தில் சிகிச்சைப் பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

நிபந்தனைகளுடன் தான் இந்தியாவின் சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு கூறியதை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார்.

கிட்டத்தட்ட அரசாங்கத்தின் கண்காணிப்பில், போலீஸ் காவலில் ஒரு கைதியைப் போல சிகிச்சைப் பெற வேண்டிய அவசியமில்லை என பார்வதிம்மாளின் மலேசிய உறவினர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் கழிப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார். மேலும் அவருக்கு இலங்கை அரசே சிகி்ச்சைக்கு ஏற்பாடு செய்யும் என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இந் நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) கூறியதாவது:

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதித்து இருப்பதாக முதல்- அமைச்சர் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் தேவையற்ற நிபந்தனை விதித்து இருப்பதாகவும், எனவே சிகிச்சை பெற அவர் தமிழ்நாட்டுக்கு வர விரும்பவில்லை என்றும், அவர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு சென்று விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் டெல்லி சென்றபோது மனிதாபிமானத்துடன் பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். ஆனால் இப்போது அவர் தமிழகம் வர மறுத்து விட்டதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இது குறித்து தகவல் எதுவும் முதல்வருக்கு வந்துள்ளதா? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

ஒரு அட்வைஸ்…

இதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், “பீட்டர் அல்போன்ஸ் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை, அவர் பத்திரிகைகளிலே படித்துத் தெரிந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்ற ஒரு செய்தியே தவிர, அதிகாரப்பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ- பார்வதி அம்மையாரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இந்த அரசுக்கு வரவில்லை. உங்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இயலாது என்ற கருத்து அமைந்த கடிதம் அவரால் அனுப்பப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், எந்தக் கடுமையான நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்படவில்லை. அவர் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பாதுகாப்பு என்றால் சிறைக்கோட்டம் போன்ற பாதுகாப்பு அல்ல. போஷாக்கில்- ஒருவர் உடல் நலம் இல்லாமல் வரும்போது, அவரைக் காப்பாற்ற- அவருக்குப் பரிந்து பணிவிடைகள் செய்ய- மருந்து அளிக்க தக்க டாக்டர்களிடத்திலே அவரது உடலைப் பரிசோதிக்க ஏற்றவொரு மருத்துவமனையிலே அவரைத் தங்க வைத்து, அடிக்கடி கவனித்துக்கொள்கின்ற அந்த முயற்சிகளை மேற்கொள்ள அரசின் பாதுகாப்பிலே இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டதே தவிர, கடுமையான நிபந்தனைகள் எதுவும் அவருக்கு விதிக்கப்படவில்லை.

நிபந்தனைகளே எதுவும் விதிக்கப்படாத காரணத்தால், அவரைத் தாராளமாக- ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு கொள்ளவோ, தொடர்பு உள்ளவர்களோடு நட்பு கொள்ளவோ கூடாது என்பதுதான் நிபந்தனை.

தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு ஒரு பிரதானமான, விளம்பரம் பெற்ற, மிக முக்கியமான ஒரு பிரமுகருடைய தாயார் இங்கே வந்து தங்கி இருக்கும் போது, அவரை பயன்படுத்திக்கொண்டு இங்கே அரசியல் யாரும் நடத்துவதற்கு இடம் தராத வகையிலேதான், இந்த அரசு அத்தகைய நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் போச்சு, இல்லாவிட்டால் உங்களை இங்கே அனுமதிக்க முடியாது என்று கூடச் சொல்லவில்லை.

அவர்களுக்கு ஒரு அட்வைஸ் என்பதைப்போல, நீங்கள் இங்கே வந்து தங்குங்கள், சிகிச்சை பெறுங்கள். தகுந்த மருத்துவமனையிலே உங்களை அனுமதித்து, திறமையான டாக்டர்கள் மூலமாக உங்களுடைய உடல்நிலையைப் பரிசோதித்து ஏற்ற வைத்தியங்களைச் செய்கிறோம்.

ஆனால், அந்த நேரத்திலே உங்களை வைத்து யாராவது அரசியல் நடத்த விரும்பினால், அதற்கு நீங்கள் இடம் தரக்கூடாது என்று கனிவோடு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அறிவுரை என்று சொல்ல முடியாது. வேண்டுகோள் விடுத்து அவர்களை இங்கே அனுமதிக்கத் தடையில்லை என்று மத்திய அரசு, மாநில அரசுக்குத் தெரிவித்திருக்கிறது.

மாநில அரசும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, பீட்டர் அல்போன்ஸ் சொல்கின்ற இந்தச் செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கிறது.

ஒருகாலம் இருந்தது. கிராமப்புறங்களிலே ஒரு செய்தியைப் பத்திரிகைகளிலே படித்து விட்டுச்சொன்னால், அப்பொழுதெல்லாம் அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்பார்கள். பத்திரிகைகளிலே வந்திருக்கிறது என்று சொன்னால், அப்படியா! பத்திரிகைகளிலேயே வந்துவிட்டதா? என்று அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வரும்.

இந்தக் காலத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன என்று சொன்னால், பத்திரிகைகளில்தானே செய்தி வந்திருக்கிறது என்று சொல்கின்ற அளவிற்கு பத்திரிகைச் செய்திகளாகி விட்ட இந்தக் காலத்தில் பார்வதி அம்மையாருடைய திட்டவட்டமான பதில் வரும் வரையில், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் இதனை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்…” என்றார் கருணாநிதி

அதே நேரம், மத்திய அரசு அனுமதி அளித்த விவரத்தை பத்திரிகை, இணையச்செய்திகள் மூலமே அறிந்துள்ளனர் பிரபாகரன் உறவினர்கள். அவர்களுக்கு இதுவரை அனுமதிக் கடிதமும் போய்ச் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 thoughts on “பார்வதி அம்மையாரை வைத்து யாரும் அரசியல் நடத்த இடம்தர முடியாது! – கருணாநிதி

 1. Manoharan

  நடத்துங்கடா… இன்னும் எத்தனை நாளக்குன்னு நாங்களும் பார்க்கிறோம்.

 2. sakthivel

  கருணாநிதி – இந்த உயிருள்ள **** மனசாட்சி இல்லாமல் ஊளை இடுகிறது… இது ***** இன்னும் எத்தனை உயிர்களை எடுக்கப்போகிறதோ….??????
  அரசியல்வாதிகளை மிருகங்களுடன் ஒப்பிடக்கூடாது…. அது அந்த மிருகத்திற்கு தான் கேவலம்…..

 3. cholan

  எப்படி எப்படியெல்லாம் பேசுறாங்க … உட்காந்து யோசிப்பாங்களோ …நேற்று நிபந்தனை என்று சொல்லிவிட்டு இன்று நிபந்தனைக்கு இன்னொரு சொல் ‘வேண்டுகோள்’ என்று எப்படி மாற்றி பேசமுடியுது . நிபந்தனைக்கும் அட்வைஸ்க்கும் வேறுபாடு உண்டு என்று நினைக்குறேன்.

  மிகவும் வேதனை படுகின்றேன். ஒரு புனிதமான தாயிக்கு இப்படி நடந்கின்றதே. அரசியலில் பெரிய பதவியில் உள்ளவருக்கும் ஒரு தாய் இருந்தாள். அவருக்கு இப்படி நடந்தால் தான் இந்த கொடுமையான விஷயங்களை உணரமுடியுமோ .
  தெய்வமே அந்த தயையும், இந்த தமிழ் இனத்தையும் காப்பாற்று

 4. M.S.Vasan

  முத‌ல்வ‌ர், டாக்டர், க‌லைஞ‌ர், குறிப்பிடும் ப‌த்திரிக்கை செய்திக‌ளின்
  ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, முர‌சோலி, தின‌க‌ர‌ன், தி ஹிண்டு, குங்கும‌ம், குமுத‌ம், விக‌ட‌ன்
  எல்லாத்தையும் சேர்த்துத் தானே???

 5. Mariappan

  இந்த கிழம் மட்டும் தான் அரசியல் பண்ணலாம். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கணும் . உங்க ஆட்டம் எத்தனை நாளைக்கு பார்க்கத்தானே போகிறோம் .

 6. mullaimainthan

  நீ யாரடா பேசக் கூடாது என்பதற்கு தமிழக கருணா நாயே

 7. குமரன்

  அதாவது பார்வதி அம்மாளின் உடல் நிலையை வைத்து யாரும் அரசியல் பண்ணக் கூடாது. ஏனென்றால் எம்.ஜி.ஆரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்து 1967 இல் தி.மு.க.வும் 1984 இலும் 1987 இலும் அ.தி.மு.கவும், அண்ணா செத்ததை வைத்து 1971 இல் தி.மு.கவும், இந்திரா செத்ததை வைத்து 1987 இல் இந்திரா காங்கிரசும், ராஜீவ் செத்ததை வைத்து 1991 இல் அ.திமுகவும் இந்திரா காங்கிரசும் ஆட்சியைப் பிடித்ததை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டுதான் கருணாநிதி இப்படிச் செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுவிட்டார். அதாவது பார்வதி அம்மாள் இங்கே ச்ன்னையில் சிகிச்சை பெற அனுமதித்து அவரது அம்மாளுடைய உயிருக்கு ஏதாவது ஆகி ஒரு ஊர்வலம் ஒரு கடையடைப்பு என்று பொதுமக்கள் அஞ்சலி என்றெல்லாம் வந்துவிட்டால் வரும் 2011 தேர்தலில் தனது கட்சி தோற்று அதனால் தனது மகன் ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயம். மக்கள் முட்டாள்களாகவே இருக்கவேண்டும், குவார்ட்டர், ஹாப், முட்டை பிரியாணி, ஆரத்திதட்டில் பணம், ஓட்டுக்கு 500 அல்லது ஆயிரம் என்று இவற்றையே நினைக்கும் கருணாநிதிக்கு ஒரு கிசவியின் உடல் நிலை உயிர் இவற்றைக் காப்பதில் என்ன அக்கறை.

  வெட்டியானைப் போல, கசாப்புக் கடைக்காரனைப் போல மனம் படைத்த கருணாநிதி இப்படித்தான் யோசிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *