BREAKING NEWS
Search

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி!

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி!

சென்னை: மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணிக்கும் நேரில் போய் அழைப்பு வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடக்கும் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம்குமார் திருமணத்தையொட்டி, முக்கியப் பிரமுகர்களுக்கு நேரில் போய் அழைப்பிதழ் வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் ரஜினி.

இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு வைத்தார் ரஜினி.

பின்னர் மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அவரது வேளச்சேரி இலத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார் ரஜினி.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார் ரஜினி. அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். அன்புமணியும் அவர் மனைவி சௌம்யா அன்புமணியும் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டனர்.




5 thoughts on “அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி!

  1. Robo Venkatesh

    though ramadas did bad thing for rajini. Still Rajini invited them for marriage. Rajini is the best example for good human being

  2. kk

    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்

    திருவள்ளுவரின் குறளுக்கு அர்த்தம் கொடுக்கும் எங்கள் தலைவர் – இவர் தான் உண்மை தமிழன்

    தலைவர் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் இருக்காரா ? எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு – என்னமோ திட்டம் இருக்கு ?

    தலைவர் அரசியலுக்கு வந்தால் காமராஜர் – பெரியார் – அண்ணா காலத்து அரசியல் பண்புகள் திரும்ப வரும் என்பதற்கு இதுவே முதல் சாட்சி.

  3. Kumar

    ரஜினி வேற்று மொழிக்காரர் என்பதால் அவரிடம் நல்ல குணங்கள் உள்ளன. எல்லோரையும் சமமாக பாவித்து கல்யாணப் பத்திரிகை கொடுக்கிறார்.

    தமிழர்கள் தங்களுக்குள் அடித்து கொள்வர், திட்டி கொள்வர், முட்டி கொள்வர். ஈகோ பிரச்சனை நிறைய தமிழர்களிடம் உண்டு. நீ என்ன பெரிய இவனா என்ற ஈகோ

    தமிழா ஒன்றுபடு.

  4. Rajarasigan

    ரஜினி வேற்று மொழிக்காரர் என்பதால் அவரிடம் நல்ல குணங்கள் உள்ளன. எல்லோரையும் சமமாக பாவித்து கல்யாணப் பத்திரிகை கொடுக்கிறார்.
    ///

    கண்டிப்பா , ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , இவங்கள எல்லாம் மன்னிச்ச ரஜினிக்கு , இளையராஜாவுக்கும் , பாரதிராஜாவுக்கும் நேர்ல போய் பத்திரிகை வைக்க முடியல , அதுதான் ஏன் ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *