BREAKING NEWS
Search

‘வாழ்க்கை இசையால் நிறைந்திருக்கட்டும்..!!’

அந்தி மழை பொழிகிறது… இசையால் இதயம் நனைகிறது!

டடா.. எழுதணும்னு ஆரம்பிச்சா எத்தனை எழுதுறது? உனக்கு என்ன பிடிக்கும்னு அடுத்தவங்களை பாத்து கேக்கற ஒரு கேள்வி உண்மையில் ஒப்பிடமுடியாத ஒண்ணு.ilayaraja-melodies

அதுக்கு முதலில் என் நன்றிகள். இப்படி யாராவது கேக்க மாட்டாங்களான்னு எல்லோருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும். அடுத்தவர்களின் ரசனையை பற்றி அறிந்து கொள்ள இங்கே யாருக்கும் நேரம் இல்ல.. அதுக்காக ஒரு பதிவ துவக்கி வெச்ச உங்களுக்கு ஒரு வாழ்த்து.. உங்கள் வாழ்க்கை இசையால் நிறைந்திருக்கட்டும்..!!

இதைப்படிச்ச உடனே எனக்கு தோணின முதல் பாடல் கண்டிப்பாக ராஜாவினுடையது..

என் நண்பர் சொல்வது போல, ஒவ்வொரு பாடலும் நாட்குறிப்பினைப் போன்றது.. அதைக்கேட்க்கும் போது, சில நொடிகளாவது நாம் மீண்டும் பின்னோக்கி போய்வருவது நடக்கும்.. எனக்கு அப்படியான ஒரு பாடல் “ராஜபார்வை” படத்திலிடம் பெற்ற “அந்திமழை பொழிகிறது…” இவ்வளவு வருடங்களிலும், கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோவொன்று தென்படும்.

பாடல் ஒலிநாடாவில் கேட்கும் போது மெலிதான மிருதங்க இசையுடன் துவங்கும், அதை சேர்ந்திசைக் குரல்கள் தொடரும். ஆனால் படத்தில் பார்க்கும் பொழுது இன்னும் அழகாக ஒரு விடுதியின் பார்வையற்ற குழந்தைகள் பாடும் பாடலுக்குப்பின் மிருதங்க ஓசை துவங்கும். “வசந்தா” என்ற ஒரு அபூர்வ ராகத்தில் ராஜாவின் இசைக்கோர்வை.

எஸ்.பி.பி , எஸ்.ஜானகியின் குரல்களுடன் ஒலிக்கும் ஒரு இனிய ஆலாபனைக்கான குரல் யாருடையது? கேட்டால்  வியப்பளிக்கும். இளையராஜாவின் கர்நாடக சங்கீத குரு திரு டி.வி.கோபாலகிருஷ்ணன் ராஜா மேல் கொண்ட அன்பினால் சிலபாடல்களில் ஆலாபனை மட்டும் செய்திருப்பார்.

அப்படி ஒரு பாடல் இது. அதற்கு உபகாரமாக 90 களில், டி.வி.ஜியின் பெண் தேவியை ராஜா திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். பாடலின் இன்னொரு சிறப்பு வைரமுத்து. மிக இளமையான மிகவும் இளமையான வைரமுத்துவின் வரிகள். படம் வெளியானபோது ஒரு சர்ச்சை எழுந்தது. பார்வையற்ற ஒருவன் பாடும் பாடலில் “உன் முகம் தெரிகிறது…” என்று வார்த்தைகள் எதற்கு என்று. இதற்கென்றே வேலையற்ற சிலர்
எப்போதும் இருப்பார்கள்… அவற்றையெல்லாம் புறந்தள்ளியது பாடலின் இனிமை.

இப்போதைய நிலை, பாடலின் பல்லவியின் முதல் வரியிலேயே இலக்கணப்பிழை இருந்தாலும் தேசியவிருது வரை போகலாம். “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..” எழுதியவர் பா.விஜய் என்பதால் இலக்கணப்பிழை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதை விடுங்க.. நாம் பாடலுக்கு வருவோம்…

ஒரு இனிய, சொந்த வேலைகளும் எதுவுமற்ற விடுமுறை நாளில் பிற்பகல் தூக்கத்திற்கு  பிறகு மெல்லிய தூறல் விழும் பொழுதில் உங்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்த ஒரு இடத்திலமர்ந்து கொண்டு, முடிந்தால் மடியில் உங்கள் பூனைக்குட்டியை  கிடத்திக்கொண்டு, கண்களைமூடி கேட்டுப்பாருங்கள். அதன் ஒவ்வொரு வயலின் இழுப்பிற்குள்ளும் காதல் ஒளிந்திருக்கும், மாதவியின் கண்களுக்காகவே அந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

இளையராஜா இதை பதிவு செய்யும் போது எப்படி இருந்திருக்கும்? எஸ்.பி.பி, ஜானகி, வைரமுத்து, ராஜா மற்றும் எவ்வளவு வாத்தியக்காரர்கள் எவ்வளவு நேரம் உழைத்திருப்பார்கள்.. யோசிக்க யோசிக்க விரிந்துகொண்டே இருக்கும்.. இந்த ஒருபாடலைப்பற்றி மட்டுமே இன்னும் ஆயிரம் பதிவுகள் எழுதலாம்.

இன்னொரு பாடல்…

1988 ல் வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது பெற்ற “அக்னி நட்சத்திரம்” ராஜாவின் இசையில் இன்னுமொரு மைல்கல். மிகச் சிறந்த குறிப்பிடும்படியான இசையும் பாடல்களும். பெண் குரலில் தனிப் பாடல்கள் அருகிவிட்ட பொழுதுகளில், தைரியமாக ஆறு பாடல்களில், மூன்று பெண் குரல் தனிப் பாடல்களை
(female solo’s) வைத்தார்.

ஒரு பூங்காவனம் புதுமணம், நின்னுக்கோரி வரணும், ரோஜாப்பூ ஆடிவந்தது இவை மூன்றும்.

ஜேசுதாஸ், சித்ராவின் வா வா அன்பே அன்பே எப்போதுமே என் விருப்ப எண்களில் ஒன்று.

மற்றொன்று.. ஆமாம்.. அதேதான்..

தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்,
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

படிக்கும் போதே தெரிந்திருக்கும் வாலி எழுதியதென்று..

ஆறு பாடல்களுமே வாலியின் கைவண்ணம்.. பாடல் பதிவு ஒரு கோடைப்போழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது. பாடல்
அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது. மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகமது. முறையாக பாடினால் மட்டுமே.

மாதிரிப் பதிவை (track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். சுட்டெரிக்கும் வெயிலில் இதைப்பாட வைக்கிறாரே என்று. “மழை வரலன்னா எங்களை திட்டாதிங்க” என்று கூட சொன்னனராம்.

பாடல் பதிவும் முடிந்தது. பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி. யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில். நம்பமுடியவில்லை அல்லவா? இது எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது.

தற்செயலான நிகழ்வுதான் எனினும், கேட்கும் போது மிகுந்த ருசியாயிருக்கிறது அல்லவா?.. அடுத்தமுறை கேட்க
நேர்கையில் இதை நினைத்துக்கொள்ளுங்கள்..

“ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ?..”

நானில்லைங்க.. வாலி..வாலி..!!!

இன்னுமொருமுறை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.. காத்திருக்கிறேன்!

-ஏ. மகேந்திரன்
softmagi@gmail.com
7 thoughts on “‘வாழ்க்கை இசையால் நிறைந்திருக்கட்டும்..!!’

 1. வடக்குப்பட்டி ராமசாமி

  மதிய உணவுக்கு அப்பறம் வரும் உண்ட மயக்கம்/தூக்கம் போயி சுறுப்பு வர,
  ரொம்ப போரடிக்கிற நேரத்தில் கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸ் வர,
  நண்பர்களோடு உல்லாச பயணம் போகும்போது உச்சக்கட்ட டான்ஸ் போடா, இப்படி எல்லாத்துக்கும் எனக்கு வேணும்…..

  ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
  போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)
  தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
  மனம் போல் வா கொண்டாடலாம் (2)

  ……….ஆசை நூறு வகை………

  முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
  வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
  ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
  தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே

  ……….ஆசை நூறு வகை………

  என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
  பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
  அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
  தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

  ……….ஆசை நூறு வகை………

  படம் : அடுத்த வாரிசு (1983)
  இசை : இளையராஜா
  பாடியவர் : மலேசிய வாசுதேவன்

 2. தோமா

  திரு மகேந்திரன்,

  அருமையான பதிவு, அதுவம் ராஜாவினுடைய பாடல்களை பற்றி நீங்கள் எழுதிய விதம் மிக அருமை. பதிவை படித்து விட்டு மீண்டும் பாடல்களை கேட்கும் போது புதிய அனுபவமாக இருந்தது

 3. Malar

  சுகமான பாடல்கள்… நல்ல ரசனை. இந்தப் பகுதி மிக அருமை வினோ சார்…

 4. karthikeyan

  நீங்கள் செய்து வரும் இந்த அற்புதமான பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது,
  எந்த சுயலாபமும் இன்றி செயல்படும் உங்களின் இந்த பண்பு மிக உயர்ந்த ஒன்று.
  ஒவ்வொரு பதிவிலும் கடும் உழைப்பும்,இமயத்தை எட்டும் கலாரசனையும் காண்கிறேன்.
  நீங்கள் ராஜா சாரை கண்டிருக்கிறீர்களா?
  இந்த முறை விடுமுறை யில் அவர் வீடு சென்றபோது அவர் ஊரில் இல்லை.
  எனக்கு தூர நின்று பார்த்தாலும் போதும்.அந்த சாந்தம்,தெய்வீகம்.
  அவரின் குரலை பற்றிய இந்த பதிவு மிக அவசியமான அற்புதமான பதிவும் கூட.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  எந்த உதவி தேவைபட்டளும் கேளுங்கள்.
  ஆத்தாடி பாவடை
  காமாட்சி கருனாவிலாசினி
  தோட்டம் கொண்ட ராசாவே
  சிறுபொன்மணி அசையும்
  பொன்னோவியம் கண்டேனம்மா
  மணியே மணிக் குயிலே
  சங்கத்தில் பாடாத கவிதை-ஆட்டோ ராஜா
  அடி வாடி என் கப்ப கிழங்கே
  ஜனனி ஜனனி
  அறியாத வயசு-பருத்தி வீரன்
  பறவையே எங்கு இருக்கிறாய்?
  என அடுக்கலாம்
  ஆனால் முடிக்க முடியாது
  பாடல் எழுத்தில் வேண்டுவோர் என் பழைய பதிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  http://www.karthikeyanswamy.blogspot.com
  கார்த்திகேயன்
  அமீரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *