BREAKING NEWS
Search

அண்ணன் ரஜினிக்கு எதிர்காலப் பணிகள் நிறைய இருக்கட்டும்! – பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

அண்ணன் ரஜினிக்கு எதிர்காலப் பணிகள் நிறைய இருக்கட்டும்! – பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

anirudh-sister-marriage_00010சென்னை: சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து ஏழைகளோடு வாழ்ந்து இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்து விட்ட பின்பும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வரும் அண்ணன் ரஜினிகாந்த் கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்கும் வண்ணம் அன்னை சக்தி அருள் புரிய பிரார்த்திக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வருவதால் ரஜினிகாந்த் பிறந்த நாளை அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ரொம்பவே விசேஷமாக  கருதி வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். தமிழக பாஜகவின்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் அப்படி ஒரு அரசியல் பொடி வைத்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதில், “63-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், நிரந்தர ஆரோக்கியத்துடனும் எல்லா செல்வங்களும், நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து ஏழைகளோடு வாழ்ந்து இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்து விட்ட பின்பும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வரும் அண்ணன் ரஜினிகாந்த் கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்கும் வண்ணம் அன்னை சக்தி அருள் புரிய பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்




5 thoughts on “அண்ணன் ரஜினிக்கு எதிர்காலப் பணிகள் நிறைய இருக்கட்டும்! – பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

  1. Marthu

    தங்கத்தலைவனுக்கு பிறந்தனாள் வாழ்த்துக்கள்

  2. kumaran

    தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடனும் , நிம்மதியுடனும் வாழ ஆண்டவனை பிரார்த்திகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *