BREAKING NEWS
Search

‘அடடடடா… இந்த PRESS-காரனுங்க தொல்லை தாங்க முடியலப்பா!’

‘அடடடடா… இந்த PRESS-காரனுங்க தொல்லை தாங்க முடியலப்பா!’

ன்னன் படத்தில் ரஜினியிடம் கவுண்டமணி இப்படிச் சொல்வார்…

“அடடடடா… நாட்ல இந்த தொழிலதிபனுங்க தொல்லை தாங்க முடியலப்பா… புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவன்லாம் தொழிலதிபராம்…”

-வாகனங்களில் PRESS என்று மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் ஆசாமிகளைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வசனங்களே நினைவுக்கு வரும்.

ஒருமுறை கைனடிக் ஹோண்டாவில் சென்ற நடுத்தர வயது ஆசாமி ஒருவரை தேனாம்பேட்டை போக்குவரத்துக் காவலர்கள் மடக்க, அவர் தனது வண்டியில் மாபெரும் சைஸில் எழுதி ஒட்டப்பட்ட பிரஸ் ஸ்டிக்கரைக் காட்டினார். பொதுவாக இப்படிப்பட்ட நபர்களை கண்டு கொள்ளாமல், அனுப்பிவிடுவார்கள் போலீசார்.

சிலர்தான் மேற்கொண்டு விசாரிப்பார்கள். அன்று பணியிலிருந்தவர் சற்றே விவரமானவர்… ‘உங்க அக்ரிடிஷன் கார்டை காட்டுங்க’, என்றார். உடனே வந்தவர், தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார்.

அதில் ‘எம் மணி, பிரிண்டிங் பிரஸ், சைதாப்பேட்டை’ என்று அச்சடித்து இருந்தது (போக்குவரத்து காவலர் நமக்குத் தெரிந்தவர்தான். அன்று அவருடன் பேசிக் கொண்டிருந்தோம், ஒரு செய்தி தொடர்பாக!).

‘யோவ் என்னய்யா பிரஸ் இது?’ என போலீஸ்காரர் கேட்க,

‘பத்திரிகை பிரஸ்தான் சார்’! என்றார் கெத்து குறையாமல் அந்த ஆசாமியும்.

‘அதான் என்ன பத்திரிகைன்னு கேட்டேன்’ என இவர் திருப்பிக் கேட்க…

‘கல்யாணப் பத்திரிகை சார்!!’, என்றார் கூலாக!
ன்னொரு பக்கம், தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், வழக்கறிஞர், மருத்துவர் என தனித்தனியாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு அலைகிறார்கள் பலரும். இவர்களையும் கொஞ்சம் கவனித்தால் நல்லதுதான்.

போக்குவரத்து விதிகளில், ‘ஸ்டிக்கர் ஆசாமிகள் மட்டும் சோதனைக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்று எந்த விதியும் இல்லையே!

tblcatroon_35120791197
குறிப்பு: அரசாங்கமே வழங்கிய ‘PRESS’ மற்றும் ‘ஊடகம்’ என்ற ஸ்டிக்கரைக் கூட எனது வாகனத்துக்கு இதுவரை பயன்படுத்தியதில்லை.  தொடர்ந்து 5 ஆண்டுகளாக சும்மாதான் வைத்திருக்கிறேன்!

-வினோ

கார்ட்டூன்: தினமலர்
9 thoughts on “‘அடடடடா… இந்த PRESS-காரனுங்க தொல்லை தாங்க முடியலப்பா!’

 1. கிரி

  //அரசாங்கமே வழங்கிய ‘PRESS’ மற்றும் ‘ஊடகம்’ என்ற ஸ்டிக்கரைக் கூட எனது வாகனத்துக்கு இதுவரை பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகளாக சும்மாதான் வைத்திருக்கிறேன்!//

  என்ன கொடுமை வினோ இது! தன்னடக்கமா இருக்கலாம் ஆனா இது நெம்ப தன்னடக்கமா இருக்கே 🙂

  குறிப்பு:

  அந்த தினமலர் கார்ட்டூன் படத்துல போலீஸ் பின்னாடி ஒரு கிளுகிளுப்பு படம் இருக்கே அதற்கும் செய்திக்கும் எதாவது சம்பந்தம் உண்டா! 😉

 2. Raja

  தினமலர் கார்ட்டூன் படத்துல போலீஸ் பின்னாடி ஒரு கிளுகிளுப்பு படம் இருக்கே அதற்கும் செய்திக்கும் எதாவது சம்பந்தம் உண்டா! 😉

  கிரி என்னமா வாட்ச் பண்ணுறீங்க.

 3. வடக்குப்பட்டி ராமசாமி

  /*
  அரசாங்கமே வழங்கிய ‘PRESS’ மற்றும் ‘ஊடகம்’ என்ற ஸ்டிக்கரைக் கூட எனது வாகனத்துக்கு இதுவரை பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகளாக சும்மாதான் வைத்திருக்கிறேன்!
  */
  அரசாங்கத்தை நீங்க கூட மதிக்கிறது இல்லையா?
  ____________
  ஆஹா… கெளம்பிட்டாருய்யா வடக்குப்பட்டி ராமசாமி!

 4. வடக்குப்பட்டி ராமசாமி

  அடடடடா… தப்பா புரிஞ்சிட்டியலே, அரசாங்கம் அடையாள அட்டை கொடுப்பது, போக்குவரத்து காவலர்களிடம் நிக்காமல் செல்வதற்காக மட்டும் அல்ல என்று நினைக்கிறேன்.

 5. mukesh

  //அடடடடா… தப்பா புரிஞ்சிட்டியலே, அரசாங்கம் அடையாள அட்டை கொடுப்பது, போக்குவரத்து காவலர்களிடம் நிக்காமல் செல்வதற்காக மட்டும் அல்ல என்று நினைக்கிறேன்.//

  ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்புவதர்க்க்காகவா?

 6. வடக்குப்பட்டி ராமசாமி

  /*
  ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்புவதர்க்க்காகவா?
  */
  முகேஷ்! உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்தேன்! இவ்வளவுதானா….

 7. r.v.saravanan

  அரசாங்கமே வழங்கிய ‘PRESS’ மற்றும் ‘ஊடகம்’ என்ற ஸ்டிக்கரைக் கூட எனது வாகனத்துக்கு இதுவரை பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகளாக சும்மாதான் வைத்திருக்கிறேன்!

  vino i will appriceate to you

 8. பாசகி

  //அரசாங்கமே வழங்கிய ‘PRESS’ மற்றும் ‘ஊடகம்’ என்ற ஸ்டிக்கரைக் கூட எனது வாகனத்துக்கு இதுவரை பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகளாக சும்மாதான் வைத்திருக்கிறேன்!//

  hats off vino-ji… கிடைக்கற சலுகைகள மறுக்க நேர்மையும் தன்னம்பிக்கையும் வேணும்…

  //கிரி says:
  குறிப்பு:

  அந்த தினமலர் கார்ட்டூன் படத்துல போலீஸ் பின்னாடி ஒரு கிளுகிளுப்பு படம் இருக்கே அதற்கும் செய்திக்கும் எதாவது சம்பந்தம் உண்டா! 😉 //

  இது டூ மச், இது டூ டூ மச் 🙂

  கிரி-ஜி ம்ம்ம்ம்ம்ம்ம் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *