BREAKING NEWS
Search

அஜீத் – கவுதம் மேனன் லடாய்?

16 வயதினிலே… ஸ்ரீதேவியின் மகள்!

சிவகாசியில் பிறந்து 16 வயதில் தமிழ் சினிமாவில் கலக்க ஆரம்பித்து, பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய ஸ்ரீதேவியின் மகள் ஜானவி நடிக்க வருகிறார்.

தமிழில் இயக்குநர் சசிகுமார் மூலம் அறிமுகமாகிறார் ஜானவி.

இதுகுறித்துப் பேச சசிகுமாரை சமீபத்தில் மும்பைக்கு வரவழைத்த ஸ்ரீதேவியும் போனி கபூரும், அவருக்கு ஸ்பெஷலாக விருந்து வைத்துள்ளனர். பலமான உபசரிப்பு முடிந்த பிறகே மகளை ஹீரோயினாக்கும் தனது ஆசையையும் சொன்னாராம் ஸ்ரீதேவி.

மறுக்க முடியுமா என்ன!

சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!

புதிய தமிழ்ப் படங்கள் தமிழகம் உள்ளிட்ட பிறபகுதிகளில் ரிலீசாகும் நேரத்தில் கேரளாவில் ரிலீஸ் செய்யக் கூடாது என்ற தடையை அமல்படுத்தி வருகின்றனர் கேரள விநியோகஸ்தர்கள்.

இதை மீறி சுறா படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் கேரளா முழுக்க வெளியிட்டது. கைட்ஸ் என்ற இந்திப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட, இப்போது இந்த இரு நிறுவனங்களுக்கும் ரெட் கார்டு போட்டுள்ளனர் விநியோகஸ்தர்கள். இந்த இரு நிறுவனங்களும்தான் சிங்கம் மற்றும் ராவணனை வெளியிட உள்ளன. ஆனால் ரெட் கார்டு போடப்பட்டுவிட்டதால், தியேட்டர் தர யாரும் முன்வரவில்லை.

ஒருவேளை தடை விலக்கப்பட்டாலும் கூட சிங்கமும் ராவணனும் தமிழ்நாட்டில் ரிலீஸான இரு வாரங்களுக்குப் பிறகுதான் கேரளாவில் ரிலீஸாக முடியுமாம்.

படங்களின் தரத்தில் கவனம் கொள்ளாமல், பிற மொழிப் படங்களைத் தடுக்க ஆரம்பிப்பது பலவீனத்தின் அறிகுறி. கேரள திரைத் துறையினருக்கு இது புரிய நாளாகலாம்!

வடிவேலுவும் திமுகவில் சேருகிறார்?

குஷ்புவைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் திமுகவில் சேரத் தயாராகிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்எஸ் மங்கலத்தில் பேட்டியளித்த வடிவேலு, “என்னை திமுகவில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

அதேநேரம், திமுகவில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது..,” என்று அரசியல்வாதி ரேஞ்சுக்கு பேசி குழப்பினார் மனிதர்.

சிங்கமுத்து விவகாரம் தொடரும் வரை இப்படித்தான் சமாளித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாரோ!

கவுதம் மேனன் Vs அஜீத்!

யாநிதி அழகிரி தயாரிக்கும் அஜீத்தின் 50வது படத்தை கவுதம் மேனன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அஜீத்தை இயக்க தனக்கு விருப்பமில்லை என்பதை பட்டும் படாமலும் கவுதம் மேனன் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “அஜீத்தின் படத்தை நான் இயக்குகிறேனா இல்லையா என்பதை அவரிடம்தான் (அஜீத்) கேட்க வேண்டும். காரணம் இந்தப் படத்தின் இயக்குநர் நான் என்று அறிவிக்கப்பட்டதோடு சரி. இதுவரை அஜீத்தோ, மற்ற யாருமே என்னிடம் இதுகுறித்துப் பேசவில்லை.

இப்போதைக்கு என் கைவசம் இரு படங்கள் உள்ளன. விண்ணைத் தாண்டி வருவாயா இந்திப் படத்தை இயக்குகிறேன். இதிலும் த்ரிஷா நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்கவிருக்கிறேன்” என்றார்.

ஏற்கெனவே சிவாஜி பிலிம்ஸுக்காக அஜீத்தும் கவுதம் மேனனும் இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன்பிறகுதான் சரண் இயக்கத்தில் அசல் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
3 thoughts on “அஜீத் – கவுதம் மேனன் லடாய்?

 1. r.v.saravanan

  தமிழில் இயக்குநர் சசிகுமார் மூலம் அறிமுகமாகிறார் ஜானவி.

  good choice

 2. Manoharan

  Its better Ajith should stop acting. It seems he is not at all interested in acting. He is very casual in selecting movies, Directors , stories etc. If he is not interested then its better to dispose all his fans associations. Money waste energy waste and everything is waste.

 3. thlada

  தல வெரி nice பிலிம் வி வான்ட் plz கம் தமிழ் நாடு waiting for ur பான்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *