BREAKING NEWS
Search

அஜீத்தின் 50வது படம் ‘மங்காத்தா’!

மங்காத்தா… அஜீத்தின் 50வது படம்!

ஜீத்தின் 50 வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்துக்கு ‘மங்காத்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜீத் – கவுதம் மேனன் பிரிவது இது முதல்முறையல்ல… அஜீத்தின் 49 வது படமான அசலை இயக்கவிருந்தார் கவுதம் மேனன். ஆனால் இருவருக்கும் இடையில் சரியான புரிதல் இல்லாமையால் அந்தப் படத்திலிருந்து கவுதம் விலக, சரண் இயக்கினார். படத்தின் ரிசல்ட் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

அடுத்து தயாநிதி அழகிரி தயாரிக்க, அஜீத்தின் 50 வது படத்தை கவுதம் இயக்குவார் என்று கூறப்பட்டது. கடந்த ஆறுமாத காலமாக இதுகுறித்து பல செய்திகள். ஆனால் அஜீத்தோ எந்த ரியாக்ஷனும் காட்டாமல், ரேஸ்களில் பங்கேற்று வந்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு வாய்ப்புகள் கவுதமைத் தேடி வந்ததால், அவற்றை உரிய காலத்தில் படமாக்கிட வேண்டும் என கவுதம் மேனன் விரும்பினார்.

இன்னொரு பக்கம், அஜீத் கேட்ட போது கதை சொல்ல மறுத்திருக்கிறார் கவுதம். சில தினங்களுக்குப் பிறகு, ‘கதை சொல்லட்டா’ என கவுதம் கேட்க, கண்டுகொள்ளாமல் போய்விட்டார் அஜீத்.

இதனால் கடுப்பான கவுதம், ‘அஜீத் படம் குறித்து என்னிடம எதுவும் கேட்காதீர்கள். அவரிடமே கேளுங்கள்” என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.

தனது 50 வது படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுக்கு அஜீத் கொடுத்த பின்னணி இதுவே.

‘வெங்கட் பிரபு இழுத்த இழுப்புக்கு வருவார். கதையில் தனது இமேஜுக்கேற்ப சில மாறுதல்கள் பண்ண முடியும். ஆனால் கவுதம் பிடிவாதம் பிடிப்பார். தேவையற்ற பிரச்சினைகள் வரும்’ எனஅஜீத்தும், இதேபோல அஜீத் குறித்து கவுதம் நினைத்ததும்தான் இந்த முறிவுக்குக் காரணம் என்கிறார்கள்.

மங்காத்தா!

இந்தப் படத்துக்கு மங்காத்தா என்று பெயரிட்டுள்ளனர். இதனை இயக்குநர் வெங்கட் பிரபுவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகஸ்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

‘மங்காத்தா ‘ஆட்டத்தில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில்.
17 thoughts on “அஜீத்தின் 50வது படம் ‘மங்காத்தா’!

 1. bala

  சூப்பர் டீம் பட் கழுதை வாயன் பிரேம்ஜி மட்டும் வேணாம் அப்போ தான் படம் ஓடும் அவன் ஒரு ராசி இல்லாதவன் அவன் அப்பன் கங்கை அமரன் மாதிரி

 2. Dinesh

  பாலா :- கதை நல்லா இருந்தா எந்த குப்பனும் சுப்பனும் நடிச்சாலும் ஓடும்… இதுல ராசி எங்க வந்துச்சு ?

 3. Gopi

  படம் பார்க்க சினிமா கொட்டகைக்கு போகலாமா வேண்டாமா என்று ரசிகர்கள் உள்ளே வெளிய விளையாட பொருத்தமா டைட்டில் தான்.

 4. Juu

  விஜய்க்கு சுறா
  அஜித்துக்கு மங்கத்தா

  செய்ங்கடா !!! செய்ங்க !!!

 5. குமரன்

  தலைப்பைப் பார்த்தா கிராமத்து சப்ஜெக்ட் மாதிரித் தெரியுது. அப்புறம் எப்படி டை கட்டி சூட் போட்டு ஸ்டைலா நடக்கறது? எல்லாமே கனவுக் காட்சிதானா?

 6. r.v.saravanan

  நல்லதொரு பொழுது போக்கு படமாக வந்தால் சரி

 7. ALLWIN

  நன்றாக படம் அமைய எங்களது வாழ்த்துக்கள்

  கபடி ஆடி கலகுநாறு விஜய்

  மங்காத ஆடி கலகுவாறு அஜித்

 8. ALLWIN

  விஜய் நா கபடி

  அஜித் நா மங்காத்தா

  அடிசு துல் கலப்பு தல

 9. satheesh

  thala pola varumannnu solliye antha aala okkara vachutinga da… pothum ajith thaanga maataaru.. maapu ithoda un reelu stoppu…

 10. satheesh

  தல போல வருமா இல்ல வால சுருட்டிகிட்டு உக்காருமனு பாப்போம் பாவம் டா அவனையே ஏன் போட்டு வேணாம் வலிக்கும்ல…. வந்தது மொத்தம் 49 படம் அதுல 30 படம் வரைக்கும் flap போதும் போதும்….

 11. குமரன்

  மங்காத்தா என்றாலே நினைவுக்கு வருவது
  உள்ளே – வெளியே
  வை ராஜ வை
  உள்ளே – வெளியே
  வை ராஜ வை

  இந்தப் படத்தை தயாரித்த துரை தயாநிதி
  படம் “வெளியே” வரும்போது
  “உள்ளே” இருப்போமொன்னு பயந்து இப்போ படத்தை வித்துட்டாராம் !!!

  தயாரிப்பாளர் துரை தயாநிதியை
  உள்ளே வெளியே
  வை ராஜா வை

  நல்ல தலைப்புதான் மங்காத்தா ரொம்பப் பொருத்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *