BREAKING NEWS
Search

அசின் விவகாரம்… நடிகர் சங்கத்தின் இரட்டை வேடம்!

அசின் மன்னிப்புக் கேட்க வேண்டும்… இலங்கை செல்ல இனி நடிகர் நடிகைகளுக்கு தடை கூடாது! – நடிகர் சங்கத்தின் இரட்டை வேடம்

சென்னை: ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை ஒரு போர்க்குற்றவாளி என சர்வதேச நாடுகள் அறிவிக்கும் வரை, இலங்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் கலைஞர்கள் போகக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை ‘கிட்டத்தட்ட’ மீறுவதாக அறிவித்துள்ளது நடிகர் சங்கம்.

இனி நடிகர் நடிகையர் இலங்கைக்கு செல்லக் கூடாது என தனிப்பட்ட முறையில் யாரும் மிரட்டக்கூடாது என்று அந்த சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலக கட்டிடத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் மனோரமா, விஜயகுமார், துணை செயலாளர்கள் காளை, கே.ஆர். செல்வராஜ், பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவியும் செயற்குழு உறுப்பினர் சத்யராஜும் இலங்கை சென்ற நடிகை அசினை கடுமையாக கண்டித்துப் பேசினர். ஆனால் சங்கத்தின் தலைவரான சரத்குமாரோ அசினுக்கு பகிரங்க ஆதரவளித்தார். அதன் விளைவு இரண்டும்கெட்டான்தனமாக சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டுக் கலைந்தது கூட்டம்.

ராதாரவி பேசுகையில், “இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர்.

எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார்.

அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்…” என்றார்.

சத்யராஜ் பேசுகையில், “அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது. இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்-நடிகைகள் செல்லக் கூடாது.

நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம்.

அங்கு தனித் தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம்…” என்றார்.

பின்னர் பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

* இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

* இலங்கையில் நடை பெற்ற அனைத்து நிகழ்வு களையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மா லான உதவிகளை மனப்பூர் வமாகவும், பொருள் ரீதியாக வும் செய்து வருகிறோம்.

ஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

எங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாக வும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.

* திரைப்படங்களில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்கள் பெரும் தொழி லாளர்களை திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.

* திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பின ரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப் பினர்கள் ஆகாத நடி கர்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக் குள் உறுப்பிர்கள் ஆக வேண்டும். இல்லை யெனில் உறுப்பினர் அல்லாத கலை ஞர்களுடன் நமது உறுப் பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.

* இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

* நடிகர்கள், தொழி லாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது.
6 thoughts on “அசின் விவகாரம்… நடிகர் சங்கத்தின் இரட்டை வேடம்!

 1. PROMISE

  சத்யராஜ் கிரேட் ,,, நீ தான்யா புரட்சி தமிழன்

 2. குமரன்

  சரத்குமார் தாம் ஒரு சந்தர்ப்பவாதி என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். பல்லில்லாத, வெக்கம் மானம் கேட்ட, சூடு சொரணை அற்ற நடிகர் சங்கம இதுபோன்ற பொது விவகாரங்களில் இனிமேல் வாயைத் திறந்து பேசக்கூடாது என்று ஒரு தடையைத் தமிழர்கள் அறிவிக்கவேண்டும்.

  சரத் குமாருக்கு “அசினின் அடிவருடி” என்ற பட்டத்தையும் நடிகர் சங்கமே தரலாம்.

 3. Manoharan

  சரத்குமார் ஒரு மானங்கெட்ட அரைவேக்காடு. ராதிகாவை வைத்து கடன் அடைத்த மாமா பயல். கருணாநிதியின் அடிவருடி. அசினை பற்றி பேசக்கூட அருவருப்பாய் உள்ளது. அவளை தமிழ்நாட்டுக்குள் நுழையவே விடக்கூடாது .

 4. செந்தமிழ்ச்செல்வன்

  முதலில் மாயாதேவி, நக்மா, ராதிகா… இந்த வரிசையில் இப்போது அசின்….

  நல்லாயிருக்குடா சரத்து…

 5. vasu

  இதெல்லாம் எதிர் பார்த்தது தான்……

 6. niyayam

  sarath mattumalla
  ellarumthan santharpa vathihal

  sathyaraj mattum enna thamizhan entra unarvulaya pesuran
  ellam oru publicity than

  neengellam ethukku avangala thalaivanhal mathiri thookki vachchittu irukkeeenga?

  avankalum oru thgolil pantanuhal endu utta mudinchithu thane?
  neengal than avangala periyalakkurathu

  avangalthan ennamo ulagathula ulla ella pirachchinayum theerka vanthavankal mathgiri neengalum avangalta poi karuthu kekkurathu.

  amerikkala pirachchinanmdalum nadiharkal kandanam therivikkanumnu ethir pakkurathu neengakalthane?

  neenga ethir paththathukku maththama avngal karuthuthu sonna thesa thurohi thamilina thuroki illanda veli manilaththilunthu vanthavan endellam pattap peyar solla vendiyathu

  neenga ethir pakkuratha sollitta avan evana irunthalum avanthan thalaivan entra rang ukku thookki vaikkurathu

  ithanala thanda avangalum appidiye irukkangal
  Iithu varaikkum avangal porattam nadaththi etahvathu ORU VISAYAM nadanthirukka avangalukku publicitiya thavira
  innum ethukkuda avanukaldatha pudichchi thongittu irukkeenga?

  ongala ellam 100000 periyar vanthalum thiruththelathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *