BREAKING NEWS
Search

அசினுக்கு நடிகர் சங்கம் கண்டனம்.. தமிழில் நடிக்க தடை!

அசினுக்கு நடிகர் சங்கம் கண்டனம்… தமிழில் நடிக்க தடை!

லங்கையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

மேலும் தமிழ் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், நடிகர்-நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன.

இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவை இப்போது நடிகை அசின் மீறி இருக்கிறார்.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘ரெடி’ என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.

முதலில் மொரீஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பு இது. ஆனால் ராஜபக்சே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சல்மான்கானுக்கு கூறியது. மேலும் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படாத வடக்கு இலங்கையின் சில பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது (இப்போது கண்ணி வெடியே வெடிக்காதா?)

கேரளாவை சேர்ந்த அசின், உள்ளம் கேட்குதே என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு வரை மலையாளம், தெலுங்கில் இரண்டாம் நிலை நாயகியாக ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, போக்கிரி, கஜினி, தசாவதாரம் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி ஆனார். பிற மொழி படவுலகிலும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.

கஜினி (இந்தி) படத்தின் மூலம் மும்பை பட உலகுக்கு அசின் அறிமுகமானார். அவர் நடித்து அடுத்து வெளி வந்த ‘லண்டன் ட்ரீம்ஸ்’ என்ற இந்தி படம் படு தோல்வி அடைந்தது.

வேறு புதிய படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா இருந்த அசின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்பியது. விஜய் நடிக்கும் ‘காவல்காரன்’ என்ற படத்தில், அவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு மீண்டும் ‘ரெடி’ படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தி பட உலகில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று கருதிய அவர், ‘காவல்காரன்’ படத்தின் இயக்குநர் சித்திக்கிடம் கேட்டுக் கொண்டு, அந்த படத்தின் கால்ஷீட் தேதிகளை இந்தி படத்துக்கு கொடுத்து விட்டார். போகவேண்டாம் என்ற விஜய்யின் வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

தமிழ் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கை சென்று நடிக்கக் கூடாது என்ற கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, அசின் இலங்கை சென்று இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது (ஏற்கெனவே ராதாரவி இதுகுறித்து நமக்களித்த பேட்டியை வெளியிட்டுள்ளோம்).

அதற்கு பதில் அளித்து, ராதாரவி கூறியதாவது:

“கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்வோம்…” என்றார்.




8 thoughts on “அசினுக்கு நடிகர் சங்கம் கண்டனம்.. தமிழில் நடிக்க தடை!

  1. Juu

    “எனக்கு என்னோட மச்சான்ஸ்தான் முக்கியம்” என்று சொன்ன நமீதா எங்கே!!!
    பணம்தான் முக்கியம் என்று இலங்கை போன அசின் எங்கே???

    மக்களே!!! மறுபடியும் யோசிங்க!!!
    உண்மையான அன்பை புரிஞ்சிக்கோங்க…

  2. degalti

    ஜு கரெக்டா சொநீங்க்பா ….

    நமீதா தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் !

  3. Krishna

    கேரளா புத்தி அப்படியேதான் இருக்கும்…இதுல இவ மட்டும் என்ன விதி விலக்கா?

  4. krishnamoorthy

    என்ன தான் தடை போட்டாலும் கடைசியில் ஜெயிக்க போவது யாரு பார்போம்.நடிகை திவ்யா கன்னட திரைபடைதுறையினர் விழாவில் கலந்துகொண்டாள், தென்னிந்திய திரைப்பட சங்கம் என்ன செய்துது.
    சீமான் எப்படி சூர்யா விசயத்தில் பல்டி அடித்தாரோ அதேபோல் எதாவது நடக்கும்.மொத்தத்தில் தமிழன் என்ன ஒரு முட்டாள்.

  5. raj.s

    இவனுங்க சும்மா இப்படி சொல்லுவானுங்க … நாளைக்கு அசின் அவ வாய விரிச்சு சிரிச்ச மாரிடுவானுங்க.

  6. kiri

    எல்லாம் சல்மான் கானுடைய ***செய்யுற வேலை!!

  7. குமரன்

    அன்பர் கிருஷ்ணா,

    ///கேரளா புத்தி அப்படியேதான் இருக்கும்…இதுல இவ மட்டும் என்ன விதி விலக்கா?///

    இது தவறான அணுகுமுறை. எம்.ஜி.ராமச்சந்திரன் கூட மலையாளிதான். அவர்தான் ஈழத்தமிழருக்கு அதிக ஆதரவுதந்தவர். என்ன, என் தமிழ், என் தமிழ் என்று தம்பட்டம் அடிக்கமுடியவில்லை அவருக்கு. அவர்தான் பிரபாகரனுக்கு ஆதரவு தந்த ஒரே தமிழக முதல்வர். அவர்தான் தமிழகத்தில் ஈழப்போராளிகளுக்கு ராஜீவ் தயவுடன் பயிர்ச் முகாம்கள் அமைத்து ஆதரவு தர மத்திய அரசை ஏற்பாடு செய்தவர். அவர் ஆட்சியில்தான் அதிக அளவில் பொருள் உதவியும் ராணுவ உதவியும் ஈழப்போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

    மாநில ரீதியாகப் பிரித்தால் நாம் யாரும் நிம்மதியாக வலமாக சுதந்திரமாக வாழமுடியாது என்பதே உண்மை. ஒன்றுபட்ட பாரதமே வலிமை. மொழி மதம் இவற்றால் பிளந்தால் நாமெல்லாருமே வேற்றானுக்கு அடிமை.

  8. eelam tamilan

    Hope all understand the reason for this news… 🙂 no comments..

    தமிழ்ச் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்.

    அந்த வகையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 31வது ஆண்டு பரிசளிப்பு விழா இன்று காலை சென்னை பிலிம்சேம்பர் அரங்கில் நடந்தது.

    இதில் அதிக மதிப்பெண் பெற்ற 55 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிவகுமார் பேசும்போது
    1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து தன்னால் முடிந்த கல்வி வளர்ச்சி உதவிகளை செய்துவந்தது.

    25 ஆண்டுகள் முடிந்தபிறகு எனது பிள்ளைகளான சூர்யா, கார்த்தி ஆகியோர் அந்தப்பணியை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்துவருகிறார்கள்.

    நிதி உதவி வழங்கப்பட்ட 55 பேரில் மாற்றுத்திறனாளிகள் 8 பேரும், தமிழக அகதிமுகாம்களில் வசிக்கும் ஏழை ஈழத்தமிழ் மக்களின் பிள்ளைகள் 7பேரும்,மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 5 பேரும் அடங்குவர்.

    இலங்கையில் வாழ்வைத் தொலைத்து தமிழகத்தில் அகதிமுகாம்களில் துன்பப்படுகின்ற ஈழத்தமிழர்களின் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டும் உதவி செய்வதை அகரம் பவுண்டேசன் கடமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது’’ என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *