BREAKING NEWS
Search

அசினுக்கு கறுப்புக் கொடி… 4 பேர் கைது!

அசினுக்கு கறுப்புக் கொடி… 4 பேர் கைது!


டிகை அசினுக்கு கறுப்புக் கொடி காட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே விஜய்யுடன் காவலன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற போது இந்த போராட்டம் நடந்தது.

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திடீரென்று ஆதரவு தெரிவித்ததால், தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.

ஆனால் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அசினுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவர் இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் இதற்கெல்லாம் அசின் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை. தனது செயலை நியாயப்படுத்தியதுடன், விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார், பலத்து பாதுகாப்புடன். எந்த எதிர்ப்பும் இல்லை.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார்.

இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்-அசின் நடிக்கும் இப்படத்தில் வடிவேல் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களைப் பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் மேட்டுப்பாளையம் வந்தார். நடிகர் வடிவேலு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது.

அசின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எதிராக திடீரென்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்தின்போது, ‘அசின் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கக்கூடாது… தமிழகத்துக்கும் வரக்கூடாது’ என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

உடனடியாக போலீசார் வந்து கறுப்புக் கொடி காட்டியவர்களில் 4 பேரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெரியார் திராவிடர் கழகம், அசின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் இனி இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளது.
6 thoughts on “அசினுக்கு கறுப்புக் கொடி… 4 பேர் கைது!

 1. vimala

  கண்டிப்பா அசின் கூட நடிக்கும் விஜய்க்கும் தடை விதிக்கணும் எல்லாம் தெரிந்து கொண்டே மீண்டும் அசின் கூட நடிப்பது தவறு தமிழ் மக்களை எல்லாம் இந்த விஜய் எமதிட்டு இருக்கான்

 2. Dinesh

  தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததே இதற்க்கு காரணம். நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இவளை மாதிரி ஆட்களை நம் மாநிலத்திருக்கு உள்ளே விடாமல் செய்து விடலாம்.

 3. Muthu

  அசின் என்கிற பிசினுக்கு கருப்பு புள்ளி குத்தி மொட்டையடித்து கழுதை மேல் ஏற்றி தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும்… இது இவளுக்கு மட்டும் தரும் தண்டனை இல்லை தமிழ் இனத்திற்கு எதிராக யார் பேசினாலும், அந்த துரோகிகளை யார் ஆதரித்தாலும் அவர்களுக்கும் தர வேண்டும்… இப்படிப்பட்ட நடிகை, நடிகர்களை இனமானமுள்ள தமிழர்கள் சீண்டாமல் இருந்தாலே இவர்கள் இருக்கும் இடம் இல்லாமல் ஆகிவிடுவார்கள்…

 4. கடலூர் எழில்

  அட குஜை எத்தனப் படம் ஊத்தினாலும் நீ அடங்கமாட்டியா, இன்னாத்துக்கு உனக்கு அசின் கேட்குது, இனத்தை அழித்த ராஜபக்சவின் மனைவியின் மடியில் கொஞ்சி விளையாடிய இந்த சேச்சி இனி தமிழ்நாட்டில் இடம் இல்லை.உன் கூட நடிச்சா எல்லாம் சரியாயிடும் நு நெனப்பு. நீங்கள் நடிக்கும் விளம்பரத்தையே எங்கள் மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
  ஜெயராமுக்கு என்ன நடந்ததுனு சேச்சி அசினுக்கு குஜை கொஞ்சம் எடுத்துச் சொன்னால் நல்லா இருக்கும்.

 5. Rajmohan.K

  Why parciality inbetween asin and Mr. Asin, State Government is supporting and giving all sort of protection to asin and torturing Mr. Seeman.

  People should understand.

  Mr. Vino is requested to update all news deatils related to Mr. Seeman and his legal battle as fast as possible.

  Also thanks for all ur support to Mr. Seeman.

 6. தமிழன்

  டாக்டர் கஜஜை சீ விஜய் உங்களுக்கு யன் இந்த வேண்டாத வேலை வேற வேல இருந்தா பார்க்க வேண்டியது தான யான் எங்களை இப்படி சித்ஜ்ராவதை பண்றீங்க. அதல வேற பிசின் சீ நன்றி கெட்ட மலையாளி அசின் அவளை எல்லாம் தமிழ் நாட்டில் விடுவதே தப்பு . தயவு செய்து தமிழையும் தமிழ் மக்களையும் கொச்சை படுத்த வேண்டாம் குஜை மற்றும் பிசின் .அவள் ஒரு மலையாளி தான அதன் தமிழன் எப்படி போன என்ன செத்த என்ன சும்மாவா சொல்லி இருக்காங்க கொலையாளிய நம்பினாலும் மலையாளிய நம்ப கூடாது இன்னு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *