BREAKING NEWS
Search

அசத்திய வாரிசுகள்!

அசத்திய வாரிசுகள்!

சென்னையில் இந்திய தொழில் – வர்த்தக கூட்டமைப்பின் ‘ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் தொடர்பான வர்த்தக மாநாட்டில்’ பங்கேற்ற நட்சத்திர வாரிகளான சௌந்தர்யா ரஜினி, ஸ்ருதி ஹாஸன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் மூவருமே இறுதிநாள் நிகழ்ச்சியில் அசத்தலாகப் பேசி அப்ளாஸ்களை அள்ளியுள்ளனர்.

DSC_0559 copy

அடுத்த தலைமுறை சினிமா சாதனையாளர்களுடன் கலந்துரையாடல் என்பது இந்த நிகழ்ச்சிக்கான தலைப்பு. நிகழ்ச்சியை நடத்தியவர் என்டிடிவி குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் ஜெனிபர் அருள்.

தங்கள் இலக்கு, இன்றைய ரசிகர்கள் குறித்த தங்களின் புரிதல்கள் என பலவற்றைப் பற்றியும் அவர்கள் சொன்ன விதம், சாதனையாளர்கள் பலரையும் விழிவிரிய வைத்தது.

தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துதல், இலக்கண மரபுகளை ரசிகர்களின் தேவைக்கேற்ப மீறுதல், புதிய கலாச்சாரத்தின் ரசனைக்குரிய விஷயங்களை தமிழிலும் தருதல் என வெரைட்டியாக அசத்தினர் மூவரும். அனிமேஷன் வடிவம் நிஜ சினிமாவுக்கு இணயாக எந்த அளவு ரசிக்கப்படும் என்பது பற்றி சௌந்தர்யா பேசியதை கவனத்துடன் பார்த்தனர் தயாரிப்பாளர்களும் சினிமா வர்த்தகர்களும்.

சத்யம் சினிமாஸின் கிரண் ரெட்டி, கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமார், நடிகர் ரானா டகுபட்டி என இன்னும் சில வாரிசுகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

-என்வழி




7 thoughts on “அசத்திய வாரிசுகள்!

  1. Srinivas

    // Rajesh says:
    November 22, 2009 at 6:06 pm
    Mr. Srinivas, Thalivara pathi than thappa பேச கூடாது ஆனா உண்மைய சொல்லானும் .செந்தில் கரெக்ட்.
    //

    Mr.ராஜேஷ்,

    மனசுக்கு பிடிச்சா, அவங்க நல்ல இல்லேன்னாலும் அழகா தெரிவாங்க..
    மனசுக்கு பிடிக்கலேன்னா , ‘உலக அழகி’யா இருந்தாலும் ‘கெழவியா’ தான் தெரிவாங்க…

    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சரி.. நல்லா இல்லை என்று யாரையும் கூற முடியாது…

    உண்மையை சொன்னால் நல்லது தான்…ஆனால் உங்கள் கருத்து தான் உண்மை என்று எப்படி எடுத்துக்கொள்வது???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *